ETV Bharat / state

லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் சிதறிய பீர் பாட்டில்கள்

author img

By

Published : Jul 31, 2023, 2:21 PM IST

Updated : Aug 4, 2023, 12:32 PM IST

tiruppur
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டபாளையம் அருகே பீர் பாட்டிகளை ஏற்றிச் சென்ற லாரி கவீழ்ந்து விபத்து.

லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் சிதறிய பீர் பாட்டில்கள்

திருப்பூர்: செங்கல்பட்டு பீர் கம்பெனியில் இருந்து 25,200 பீர் பாட்டில்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று புறப்பட்டது. அந்த லாரி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை (ஜூலை 31) வந்து கொண்டு இருந்தது. லாரியை பெரம்பலூர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (40) என்பவர் இயக்கி வந்தார்.

இந்த லாரி சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டபாளையம் அருகே வந்த போது லாரியை பேருந்து ஒன்று முந்திச் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது.

இதில் லாரியில் இருந்த 25,200 பீர் பாட்டில்களும் சாலையில் விழுந்து உடைந்து சிதறியது. பாதிக்கும் மேல் பீர் பாட்டில்கள் உடையாமலும் இருந்தது. அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் விபத்தினை பார்த்ததும், கீழே சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை யாரும் எடுத்து செல்ல விடாமல் அரண் அமைத்து நின்றனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு இயக்குநர் செந்தில்குமார் கடத்தல்.. 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

எரியிற தீயில.. பிடுங்குனது மிச்சம் என்ற ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப தற்போதைய காலத்தில் பல்வேறு ஊர்களில் நடக்கிற தீவிபத்து, சாலை விபத்துகளில் பலரும் கிடைக்கிற பொருட்களை அள்ளிச்செல்லும் காணொளிகளை நாம் பார்க்கிறோம். ஆனால் திருப்பூரில் லாரி கவிழ்ந்து ரோடெல்லாம் பீர் பாட்டில்கள் சிதறிக்கிடந்த நிலையில், பாட்டில்களை யாரும் எடுக்க விடாமல் அந்த பகுதி பொதுமக்கள் அரண் அமைத்து நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்குளி காவல் துறையினர் காயமடைந்த லாரி ஓட்டுநர் செல்வக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தின் மூலம் பல லட்சம் மதிப்பிலான பீர் பாட்டில்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை சுங்கச்சாவடிக்குள் தாறுமாறாக மோதிய லாரி.. ஊழியர் பலி; 3 பேர் காயம் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி!

Last Updated :Aug 4, 2023, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.