ETV Bharat / state

பள்ளி மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டைகள்.. அமைச்சர் கீதா ஜீவன் அளித்த விளக்கம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 3:49 PM IST

Minister Geetha Jeevan: தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு வழங்க இருந்த சத்துணவு முட்டைகள் அழுகி இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார்.

Social Welfare Minister Geetha Jeevan has given an explanation to the allegation of rotten eggs in Thoothukudi
சத்துணவு முட்டைகள் அழுகியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்

சத்துணவு முட்டைகள் அழுகியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்

தூத்துக்குடி: இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும், குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு WALK FOR CHILDREN பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு WALK FOR CHILDREN பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில், காமராஜ் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக தூத்துக்குடி புதிய மாநகராட்சி வரை நடந்து சென்றனர்.

பின்னர், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து குழந்தைகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களை குறைக்க வேண்டும், குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என கவனம் செலுத்தி வருகிறார்.

அழுகிய முட்டை குறித்த கேள்விக்கு, "அழுகிய முட்டை விநியோகம் செய்தவர் 96க்கும் மேற்பட்ட முட்டைகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம். முட்டையை உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனை செய்தனர்.

தமிழ்நாடு அரசுக்கு முட்டை விநியோகம் செய்பவர் திங்கள், புதன், சனி அல்லது வெள்ளி ஆகிய மூன்று நாள் கொண்டு வருவர். அதில் கலர் வைக்க வேண்டும். ஏனென்றால் பழைய முட்டை உபயோகப்படுத்திவிட கூடாது என்ற காரணத்தால். ஆகவே, அன்று முட்டையில் கருப்பு கலர் வைத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு என முட்டையில் போடப்பட்டு இருந்தது.

அன்று மழை.. தார்பாய் இல்லாமல் வண்டி வந்துருக்கு..அப்போது கருப்பு மை உறிஞ்சி கருப்பு கலர் இறங்கி உள்ளது.. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டாச்சு. சிலர் எப்போது குற்றச்சாட்டு கண்டுபிடிக்கலாம் என, இதனை பெரிய பிரச்சனை ஆக்கினார்கள். ஆனால் உண்மை நிலவரம் அவ்வாறு அல்ல. சமூக நலன் முறையாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நல்ல, தரமான, அவித்த முட்டை வழங்கப்படுகிறது.

குழந்தை திருமணம் பற்றி பேசுகையில், குழந்தை திருமணம் அதிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் தாய், தகப்பனார்கள் திருமணம் செய்து வைக்கின்றனர். அதையும் 1098 நம்பருக்கு கால் வந்தவுடன் நிறுத்தி விடுகிறோம். ஆனால் தாமாக முன்வந்து காதல் திருமணம் செய்பவர்கள் குடும்பத்தாருக்கும் தெரிவதில்லை, எங்களுக்கும் தெரிவதில்லை.

ஆகவே, அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். சட்டப்படி 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் திருமணம் செய்தால் போக்சோ சட்டம் பாயும். ஆகவே அதனை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்வதால் 18 வயதிற்கு கீழ் உள்ள திருமணம் அதிகமாக நடக்கிறது. ஆகவே தான் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் அதிகமாக உள்ளது. ஆனால் காவல்துறை சமூக பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறது.

இளம்பெண்கள் மிக கவனமாக பழக வேண்டும். பழகியவர்கள் அனைவரையும் நம்பி விடக்கூடாது. நல்லவர்கள் யாரு? கெட்டவர்கள் யாரு என்று பழக வேண்டும் எடுத்தவுடன் யாரையும் நம்பி விடக்கூடாது என்றார்.

இதையும் படிங்க: "மக்களுக்குத் தேவையான மருந்துகளை திமுக அரசு வழங்காமல் உள்ளது" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.