ETV Bharat / state

"திமுகவை தோற்கடிப்பது தான் நமது இலக்கு" - முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி

author img

By

Published : Jul 30, 2023, 2:51 PM IST

Updated : Jul 30, 2023, 3:35 PM IST

tuticorin
தூத்துக்குடி

அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் தோற்கடிப்பது தான் நமது இலக்கு என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

தூத்துக்குடி: மதுரையில் நடைபெற இருக்கும் பொன்விழா எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் பேசும்போது, “பெரிய ஜாதி தலைவர் என்று சொல்லுகின்ற டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவை எதிர்த்து நின்று வாங்கி கட்டி கொண்டார். எப்படி அடிச்சாலும் அலுகமாட்டேங்கிறான் என்று வடிவேல் சொல்லுவதுபோல் இருக்கின்றது. இப்போது டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க போவதாக கூறுகின்றனர். எத்தனை கேவலப்பட்டாலும் வெளியே போக மாட்டேங்குறார்” என டிடிவி தினகரனை சாடினார்.

மேலும், “திமுகவின் பி டீமாக செயல்படும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சரியான பாடம் அதிமுக கற்று கொடுத்து வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் அனைத்து பெண்களுக்கும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த நிலையில், தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என ஸ்டாலின் சொல்லியுள்ளது நமக்கு நன்மையே. இதனால் அனைத்து பெண்களும் அதிமுக பக்கம்தான் வருவார்கள்” என்றார்.

முன்னதாக மேடையில் பேசிகொண்டிருக்கும் போது முன்னால் அமைச்சர் எஸ்.பி சன்முகநாதன் திண்டுகல் சீனிவசனுக்கு சால்வை அணிவித்த போது இதுவரை தூத்துக்குடிக்கு வந்தவுடன் மூன்று முறை சால்வை அணிவித்து விட்டார். பேசாட்டு ஒரு துணிக்கடை வைத்து தரலாம் என திண்டுகல் சீனிவாசன் நகைச்சுவையாக பேசியது கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் சிரிப்பலையை எழுப்பியது.

இதைதொடர்ந்து, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி பேசும்போது, ”வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அச்சானியாக தான் மாநாடு நடைபெறுகிறது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள கலைஞரின் மகள் கனிமொழியை தோற்கடித்தால் திமுகவின் அங்கம் வீழ்த்தப்படும். மேலும், அதிமுக கூட்டணியில் யார் போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளர் கனிமொழியை தோற்கடிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ‘யாரும் ஏஜெண்டுகளை நம்பி செல்ல வேண்டாம்’: பாதிக்கப்பட்ட பெண் விமான நிலையத்தில் கண்ணீர் மல்க பேட்டி

Last Updated :Jul 30, 2023, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.