ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 4:38 PM IST

Etv Bharat
Etv Bharat

Thoothukudi organ donation: புன்னைக்காயல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த வசந்தனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி, ரூ.2 லட்சத்திற்கான காசோலையை கனிமொழி எம்பி நிதியுதவியாக வழங்கினார்.

தூத்துக்குடி: தூத்துக்குடி புன்னைக்காயலில் நடந்த விபத்தில் உயிரிழந்த கப்பல்மாலுமியின் குடும்பத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கானக் காசோலையை தூத்துக்குடி எம்பி கனிமொழி இன்று (நவ.8) வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் அருகே அக்.31 ஆம் தேதி இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கப்பல் மாலுமிகளான புன்னக்காயலை சேர்ந்த அலெக்சாண்டர்(35), லசிங்டன்(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த வசந்தன் ப்ரீஸ் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், இவரது தியாகத்தைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாயும் என முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படுவதாக கூறியிருந்தார்.

நிவாரணம் அளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று விபத்தில் உயிரிழந்த லசிங்டன், அலெக்ஸ்சாண்டர், வசந்தன் ப்ரீஸ் ஆகியோரின் குடும்பத்தினரை புன்னைக்காயலில் உள்ள அவரது இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்த தலா ரூ.2 லட்சத்திற்கானக் காசோலையை வழங்கினார். அதே விபத்தில் காயமடைந்து ஆத்தூரில் உள்ள ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜன் அவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, விரைந்து குணமடைய வாழ்த்தினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!

முன்னதாக, கப்பல் மாலுமி வசந்தன்(34) படுகாயத்துடன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், மீனவரான ராஜன் (54) என்பவர் ஆத்தூர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், வசந்தன் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது கணகள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதுரை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

மேலும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அரசு மரியாதையுடன், புன்னைக்காயல் புனித சவேரியார் ஆலயத்தில் நடந்த திருப்பலிக்கு பின்னர் வசந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “பாஜகவுக்கு பணியாற்றிய கருப்பு ஆடுதான் அண்ணாமலை” - காட்டமாக விமர்சித்த ஜோதிமணி எம்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.