ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் தங்களையும் இணைக்க அமலாக்கத்துறை மனு தாக்கல்!

author img

By

Published : Jun 23, 2023, 2:03 PM IST

ed-filed-a-petition-in-ourt-to-include-them-in-the-anti-corruption-department-case-against-minister-anitha-radhakrishnan
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் - திமுக அரசிற்கு இது போதாத காலம் தான் போல!

வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பு சொத்து சேர்த்ததாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையில், தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி: வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு விசாரணையில், தங்களையும் சேர்க்கக் கோரி அமலாக்கத்துறை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001 - 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4.90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி செல்வம், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்கக் கோரி அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை 80 சதவீதம் முடிவடைந்துள்ளதால், இதில் அமலாக்கத் துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அமலாக்கத் துறையின் மனு மீது வருகிற ஜூலை 19ஆம் தேதி, மாவட்ட நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவை தெரிவிக்க உள்ளார்.

அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ள விபரம் தற்போதுதான் வெளிவட்டாரங்களில் தெரியவந்துள்ள நிலையில் இதனால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 இல் தொடர்ந்த வழக்குதான்இது. அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டால், மற்ற அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் அமலாக்கத் துறை நுழையும் நிலை ஏற்படலாம்.

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அன்றோ அதற்கு முன்போ அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் மீது அப்போதைய திமுக அரசு தொடர்ந்த ஊழல் வழக்கில் சோதனை நடத்தலாம் என்பதால் இப்போது பல அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: Karur IT Raid: கரூரில் மீண்டும் வருமானவரி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.