காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து - 10 வீடுகள் சேதம்

author img

By

Published : Sep 21, 2021, 6:48 PM IST

10 வீடுகள் சேதம்

தூத்துக்குடியில் காரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கார் முற்றிலுமாக எரிந்த நிலையில், அருகிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே உள்ள குமரன்விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். திசையன்விளை அருகே அணைக்கரைப் பகுதியில் பட்டாசுகள் தயாரிக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.

நேற்று (செப்.20) இரவு பாலகிருஷ்ணன், திசையன்விளை அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவின் வாணவேடிக்கைக்காக பட்டாசுகளை கொடுத்துவிட்டு, மீதமுள்ள பட்டாசுகளை தனது காரில் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் விபத்து

இன்று (செப். 21) நள்ளிரவு 1.30 மணி அளவில், திடீரென காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், கார் தீப்பிடித்து எரிந்ததுடன் அருகில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், வாகனங்களும் விபத்தில் சேதமடைந்தன.

காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து

தகவலறிந்து வந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.

சாத்தன்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன், ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

2வது முறையாக விபத்து

முதற்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளை அருகே உள்ள அழகியவிளை பகுதியில் பட்டாசு பட்டறை நடத்தி வந்தபோதும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்து - வீடுகள் சேதம்
வெடி விபத்து - வீடுகள் சேதம்

இதையடுத்து அவரின் பட்டாசு பட்டறையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் தற்போது அணைக்கரை பகுதியில் மற்றொரு பட்டறையை நடத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற்று வெடிகள் தயாரித்து வந்துள்ளார்.

வெடி விபத்து
வெடி விபத்து

இதனடிப்படையில், காவல்துறையினர் பாலகிருஷ்ணன் தயாரிக்கும் பட்டாசுகளின் தன்மைகள் குறித்தும் விசாரித்து மோற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விழுப்புரத்தில் நள்ளிரவு முதல் பெய்துவரும் பெருமழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.