ETV Bharat / state

’தமிழ்நாட்டின் சிறப்பான ஆட்சியை சீன அதிபரே பாராட்டியுள்ளார்’ - காமராஜ்.

author img

By

Published : Dec 28, 2019, 3:53 PM IST

minister
minister

திருவாரூர்: தமிழகத்தில் தான் நல்லாட்சி நடைபெறுவதாக மத்திய அரசும் சொல்கிறது, தமிழக்திற்கு வருகை தந்த சீன அதிபரும் சொல்லிருக்கிறார் எனவே மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் பரப்புரையில் பேசினார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

மீதமுள்ள நன்னிலம், கொடவாசல், கொரடாச்சேரி, வலைங்கமான், நீடாமங்கலம் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு வரும் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காமராஜ் பரப்புரை

அதற்காக, கொரடாச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர்,
”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் நல்ல ஆட்சி நடைபெறுவதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை சொல்கிறது. தமிழ்நாட்டிற்கு வருகைதந்த சீன அதிபரும் சொல்லிருக்கிறார். எனவே மக்கள் அதிமுக-விற்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வாக்குப் பெட்டியை திருடிச்சென்று முட்புதரில் போட்டுவிட்டு உறங்கிய நபர் கைது!

Intro:Body:தமிழகத்தில் தான் நல்லாட்சி நடைபெறுவதாக மத்திய அரசும் சொல்கிறது, தமிழக்திற்கு வருகை தந்த சீன அதிபரும் சொல்லிருக்கிறார் எனவே மக்கள் அதிமுக-விற்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் பிரச்சாரம்.

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மேலும் மீதமுள்ள நன்னிலம்,கொடவாசல்,கொரடாச்சேரி, வலைங்கமான் மற்றும் நீடாமங்கலம் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு வரும் 30ம் தேதி நடைபெறயுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கொரடாச்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,

தமிழகத்தில் எடப்பாடியாருக்கும்,ஒபிஎஸ் -க்கும் ஆதரவு அளிக்கும் வகையில் மக்கள் வாக்கு அளித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நல்ல ஆட்சி நடைபெறுவதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை சொல்கிறது.
தமிழகத்திற்கு வருகை தந்த சீன அதிபரும் சொல்லிருக்கிறார் தமிழகம் சிறப்பாக உள்ளது.
எனவே மக்களும் சொல்கின்றனர், மத்திய அரசும் சொல்கிறது, சீன அதிபரும் சொல்லிவிட்டார் தமிழகம் சிறப்பாக உள்ளது எனவே மக்கள் அதிமுக-விற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.