periya nandi pongal festival: அண்ணாமலையார் கோயில் சிறப்பு வழிபாடு

author img

By

Published : Jan 15, 2022, 7:41 PM IST

அண்ணாமலையார் கோயில்

periya nandi pongal festival: அண்ணாமலையார் கோயிலில் மாட்டுப் பொங்கலையொட்டி நந்தி பகவானுக்கு காய்கறி, பழம், இனிப்பு வகைகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

periya nandi pongal festival: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடியதாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கக் கூடியதுமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி தை மாதம் இரண்டாம் நாளான இன்று (ஜனவரி 15) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்

அதன்பின்னர் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் பின்னர் லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி, பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு காட்சி அளித்தனர்.

அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்

இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர சமயத்தில் சாமி தரிசனம்செய்தனர்.

முன்னதாக கோயிலின் கருவறை முதல் 1000 கால் மண்டபம் வரை உள்ள ஐந்து நந்தி பகவானுக்கு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் காட்சி அளித்தனர்.

அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்

இதேபோன்று இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம். இதனையடுத்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதியில் காலை முதல் மாலை வரை மூன்று முறை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார்.

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.