ETV Bharat / state

4 உலக சாதனைகளை படைத்த திருவண்ணாமலை மாவட்டம்!

author img

By

Published : Feb 4, 2023, 7:00 AM IST

4 உலக சாதனைகளை படைத்த திருவண்ணாமலை மாவட்டம்!
4 உலக சாதனைகளை படைத்த திருவண்ணாமலை மாவட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,333 கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் கட்டமைக்கபட்ட மீள் நிரப்பு கட்டமைப்புக்களை, 14 நாட்களில் கட்டி அமைத்ததற்காக பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கப்பட்டது.

4 உலக சாதனைகளை படைத்த திருவண்ணாமலை மாவட்டம்!

திருவண்ணாமலை: சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும், பசுமை மற்றும் இயற்கையோடு மனிதகுலம் ஒன்றி வாழ, வீணாகும் மழை நீரினை 100 சதவிதம் நமக்கு தேவையான விதத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்கிற விழிப்புணர்வுக்காகவும், தமிழ்நாடு அரசு ‘பண்ணை குளங்கள்’ என்ற திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 2021ஆம் ஆண்டு 1,121 பண்ணைக் குட்டைகளை 30 நாட்களில் அமைக்கும் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேற்கொண்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி, 541 பஞ்சாயத்துக்களில் அந்தந்த பகுதி விவசாயிகளின் வேளாண் நிலத்தில், அவர்களின் ஒப்புதலோடு 1,121 பண்ணைக்குளங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தன.

இந்த உலக சாதனை முயற்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் விருதுகளை பெற்றது. தற்போது இந்த திட்டத்தின் நீட்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில், மாவட்டத்தில் உள்ள 1,333 கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் சுமார் 6 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில், 14 நாட்களில் நிலத்தடி நீர் மீள் நிரப்புக் கட்டமைப்புகள் அமைக்கும் பணிகள், கடந்த 20ஆம் தேதி முதல் உலக சாதனை நிகழ்வாக தொடங்கப்பட்டது.

இந்த பணிகள் தற்போது மாவட்டம் முழுவதிலும் முடிவடைந்த நிலையில், இந்த சாதனையை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகடாமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் சேகரிக்கும் வகையில், 14 நாட்களில் 1,333 ஆழ்துளை கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மீள் நிரப்பும் கட்டமைப்புகளை ஆய்வு செய்யும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன.

இதன் ஒரு பகுதியிாக எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் சாா்பில் திருவண்ணாமலை மவாட்டம் துருஞ்சாபுரம், வட ஆண்ட்டாப்பாட்டு, நூக்காப்பாடி, வேடந்தவாடி, ஆா்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வடிவமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மூலம் மழைநீரை சேகாிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுமானங்களை உலக சாதனை நிகழ்வுக்கு தோ்வு செய்யும் விதமாக நேற்று (பிப்.3) ஆய்வு செய்யப்பட்டது.

இந்த 4 நிறுவனங்களும் மாவட்டம் முழுவதிலும் ஆய்வு செய்ததன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 நாட்களில் 1,333 ஆழ்துளை கிணறுகளின் மூலம் நிலத்தடி நீர் மீள் நிரப்பும் கட்டமைப்புகளை உருவாக்கி சாதனை படைத்ததற்காக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷுக்கு, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகடாமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவன அதிகாரிகள் உலக சாதனை விருதுக்கான பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

இதையும் படிங்க: மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.