ETV Bharat / state

மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!

author img

By

Published : Feb 3, 2023, 11:01 PM IST

புதுக்கோட்டை அடுத்து கறம்பக்குடி அருகே தொடர் மழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு விவசாயி முருகேசன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!
மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!

மழைநீரில் சாய்ந்த 300 ஏக்கர் நெற்பயிர்கள்; வேதனையில் புதுக்கோட்டை விவசாயிகள்!

புதுக்கோட்டை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்வதும் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சம்பா அறுவடைக்கு காத்திருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள நெற்பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்து முளைக்கத் தொடங்கின.

இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர். விவசாயத்தை நம்பியே தாங்கள் பிழைப்பு நடத்தி வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இடத்தை நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வங்கி கடனுக்காக விளைநிலத்தை ஜப்தி செய்ய முயற்சி; சேலத்தில் விவசாயிகள் எதிர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.