ETV Bharat / state

"தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவும் வராது" - திருவண்ணாமலையில் ஆளுநர் தமிழிசை பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 9:40 AM IST

திருவண்ணாமலையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
திருவண்ணாமலையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Tamilisai Soundararajan:தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவும் வராது என திருவண்ணாமலையில் நடைபெற்ற ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 105வது ஜெயந்தி விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

திருவண்ணாமலை: ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நேற்று (டிச.01) நடைபெற்ற ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 105வது ஜெயந்தி விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அதிசயத்தை நான் நேரில் கண்டுள்ளேன் என தமிழிசை சௌந்தரராஜன் நெகிழ்ச்சி.

பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருவண்ணாமலை என்பது ஆன்மீக பூமி. அரசியலிலும், சமுதாயத்திலும் எவ்வளவுதான் ஆன்மீகத்துக்கு எதிராக பேசினாலும் ஆன்மீகத்துக்கும் சனாதானத்திற்கும் ஒரு பதிலாக நடந்து முடிந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஒன்றே சாட்சி. இதுதான் ஆன்மீகம்.

தமிழகம் ஒரு ஆன்மீக பூமியின் என்பதை மறுபடியும், மறுபடியும் சனாதான எதிர்ப்பாளர்களுக்கு நிரூபித்து வருகிறது. சனாதனத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆன்மீகத்தை பற்றி தெரியவில்லை. ஆன்மீகத்தை பற்றியும், அதிசயத்தை பற்றியும் அவர்கள் முழுமையாக உணர்ந்திருந்தால் சனாதனத்தை பற்றி பேச மாட்டார்கள்.

என்னை பொருத்தவரை அவர்கள் நாக்கில் இருந்து மட்டுமே பேசி வருகிறார்கள், உள்ளத்தில் இருந்து பேசவில்லை அதனால் தான் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களே சனாதானத்தை கடைப்பிடிக்கிறார்கள். சனாதனத்தை எதிர்த்து அவர்கள் பேஷனுக்காக மட்டுமே பேசி வருகிறார்கள்.

இறைவனை தெரிய வேண்டுமென்றால் நமக்கு அந்த அறிவாற்றல் வேண்டும். அவர்களுக்கு இறைவன் தெரியவில்லை என்றால் இறைவன் இல்லை என்ற பொருள் இல்லை. தமிழக மண்ணில் ஒவ்வொரு துகளிலும் ஆன்மிகம் உள்ளது. இல்லை என்று சொல்பவர்கள் அதை விரைவில் தெரிந்து கொள்வார்கள்.

திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதை கண்டித்து நானும் எனது எதிர்ப்பை தெரிவித்தேன். விவசாயிகள் மீது குண்டம் சட்டம் போட்டது மிக மிக தவறு என்று பல எதிர்ப்புகள் வந்த பின்பே தமிழக அரசு அதை திரும்ப பெற்றது.விவசாயிகளை தமிழக அரசு மதிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் நான் மிக மன வேதனை அடைந்தேன். நான் ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதனால் எனது கண்டனத்தை தெரிவித்தேன். தெலுங்கானாவில் தமிழ் வழி பள்ளிகள் மூடப்படும் என்ற ஒரு கருத்து நிலவி வருவதாகவும் அப்படி மூடப்படும் என்றால் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவர் நானாக தான் இருப்பேன்.

தமிழிசை இருக்கும் இடத்தில் தமிழுக்கு எதிராக எதுவும் வராது. புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி இல்லை என்று சொல்கின்றார்கள் ஆனால் தாய்மொழி உள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை தமிழில் நாங்கள் புதுச்சேரியில் கொண்டு வந்தோம்.எனக்கு மக்கள் சேவை செய்ய விருப்பம் அதிகம். தற்போது ஆளுநராக இந்த 5 ஆண்டுகள் மக்கள் சேவை செய்து வந்துள்ளேன். ஆண்டவன் அனுமதித்தால் மட்டுமே அடுத்த ஐந்து வருடம் என்ன செய்ய சொல்கிறார்கள் என்று தெரியவரும்.

புதுச்சேரி முதலமைச்சரின் திட்டங்களுக்கு பாலமாகவும் பாசமாகவும் உள்ளேன். நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கின்றோம் என்பதினால் பலர் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள். இரண்டு பேருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை.நாங்கள் அண்ணன் தங்கையாக புதுச்சேரியை வளர்ப்பதில் மிகச் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்” என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புழல் ஜெயில் கேண்டீனில் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்.. சோதனையில் சிக்கிய விஜிலென்ஸ் தலைமைக் காவலர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.