ETV Bharat / state

'அவுட்சோர்சிங் முறையை கைவிடுக' - தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள்

author img

By

Published : May 28, 2023, 10:28 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் 55ஆவது மாநில பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 55 ஆவது மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று (மே27) மற்றும் இன்று (மே 28) ஆகிய இரண்டு நாட்கள் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, மின்வாரிய பணியாளர்கள் அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு சிறப்பான ஊதிய உயர்வு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு நன்றியை தெரிவித்தது. மேலும் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, மின்சார சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிட அனுமதிக்காமல் அச்சட்ட முடிவினை பாராளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்ப செய்த தமிழ்நாடு முதல்வருக்கு இந்த பொது குழுவில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தினை மின்வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், மின்வாரியத்தில் மேற்கொள்ளப்படும் அவுட்சோர்சிங் முறையை தமிழ்நாடு அரசு கைவிட வலியுறுத்தியும், மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: ‘வசூல் ராஜா’ பட பாணியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு - ட்ரான்ஸ்மீட்டர் மூலம் தேர்வெழுதிய மாணவர் கைது!

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப கோரியும், மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பதவியில் காலியாக உள்ள 2000 க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுமட்டும் இன்றி மின்வாரியத்தில் பணியாற்றும் கிரேடு 1 முதல் கிரேடு 4 வரை உள்ள அனைத்து அலுவலக ஊழியர்களுக்கும் ஒரே சமயத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கிய 13 தீர்மானங்களை தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தின் 55 வது மாநில பொது குழுவில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும் வகையில் ஆட்சி அமைத்து தற்போது வரை சுமார் ஒன்றரை லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்நாடு மின்சார வாரியபொறியாளர் சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்களை அழைத்து வருக' - ஜப்பான்வாழ் இந்தியர்களிடம் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.