ETV Bharat / state

திருவண்ணாமலையில் சாலையில் மலர்களை கொட்டி மறியலில் ஈடுபட்ட பூ வியாபாரிகள்

author img

By

Published : Jan 31, 2023, 7:56 AM IST

பூ வியாபாரிகள் சாலை மறியல்
பூ வியாபாரிகள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் உயர்த்தப்பட்ட கடை வாடகை மற்றும் வரியை குறைக்க வலியுறுத்தி பூ வியாபாரிகள் சாலையில் மலர்களை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பூ வியாபாரிகள் சாலை மறியல்

திருவண்ணாமலை: ஜோதி மார்க்கெட் பகுதியில் சுமார் 138 கடைகளிடம் நகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடைகளாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் 200 சதவீதம் வாடகை மற்றும் வரி உயர்த்தப்பட்டது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரும் போது, நகராட்சி நிர்வாகம் உயர்த்தப்பட்ட கடை வாடகையை வசூலிக்க கடுமை காட்டுவதால் பூ வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு 600 ரூபாய் வசூலிக்கப்பட்ட கடை வாடகை தற்போது 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டிருப்பதால், கரோனா உள்ளிட்ட காரணங்களால் பூ வியாபாரிகள் வாடகை செலுத்த முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நகராட்சி கடைகளுக்கு வாடகையை வசூல் செய்ய வந்த நகராட்சி அதிகாரிகள் கந்துவட்டி வசூலிப்பது போல் கடை உரிமையாளர்களிடம் கடுமை காட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென கடையிலிருந்த பூக்களை சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் அரை மணி நேரமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் தெரிவிக்கையில் 200 சதவீதம் உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் வரியை குறைக்க வேண்டும் என்பதே தங்களுடைய ஒற்றை கோரிக்கையாக உள்ளது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ‘கவுன்சிலர்களுக்கும் ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.