ETV Bharat / state

திருவள்ளூரில் கரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்

author img

By

Published : Apr 13, 2021, 10:04 AM IST

Municipal Commissioner
நகராட்சி ஆணையர்

திருவள்ளூர்: கரோனா பரவலைத் தடுத்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் எடுக்கப்பட்டுவருவதாகத் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக, கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டுகிறது.

அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் கரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இது குறித்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், ஈடிவி பாரத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், "நகராட்சி முழுவதும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி எடுக்கப்பட்டுவருகின்றன.

பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கரோனா வழிகாட்டி நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுவருகின்றன.

நகராட்சிப் பணியாளர்கள் மூலம் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றுவருகின்றது.

திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சிறப்புப் பேட்டி

மேலும், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வுப் பரப்புரைகளும், கபசுர குடிநீர் வழங்கவும் நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை அருகே பாரம்பரிய மீன்பிடித் திருவிழா: பொதுமக்கள் உற்சாகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.