ETV Bharat / state

திருவள்ளூரில் நடுரோட்டில் பிரேக் டவுன் ஆன லாரி - 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு!

author img

By

Published : Aug 2, 2022, 9:48 PM IST

Etv Bharatலாரி நடுரோட்டில் பிரேக் டவுன் ஆனதால்- 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
Etv Bharatலாரி நடுரோட்டில் பிரேக் டவுன் ஆனதால்- 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

சி.வி.நாயுடு சாலையில் உள்ள மரம் அறுக்கும் பட்டறையில் லோடு ஏற்றிக் கொண்டு வெளியே வந்த லாரி நடுரோட்டில் பிரேக் டவுன் ஆனதால் சென்னை முதல் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியது.

திருவள்ளூர்: சி.வி. நாயுடு சாலையில் உள்ள மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு 15 டன் எடையுள்ள லாரி வெளியே வரும்போது நடுரோட்டில் பிரேக் டவுன் ஆகி நின்றதால் சென்னை முதல் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பழைய டோல்கேட் காமராஜர் சிலை காக்களூர் சிக்னல் உள்ளிட்ட 2 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

லாரி நடுரோட்டில் பிரேக் டவுன் ஆனதால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு

காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி வேலைக்குச்செல்வோர் இவ்விவகாரத்தில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார், லாரி, பேருந்துகள், பள்ளிப்பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்துப்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பழுதான லாரியை சரி செய்யும் பணியில் மரம் அறுக்கும் பட்டறை ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கிடையில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து இந்த வாகனம் செல்வதற்கு வழி விட்டு வாகனங்களை அப்புறப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

பாதுகாப்புப்பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வாகனங்களை சரி செய்தனர்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.