ETV Bharat / state

திருவள்ளூரில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

author img

By

Published : Feb 26, 2022, 1:40 PM IST

legislative-assessment-committee-inspects-tiruvallur
legislative-assessment-committee-inspects-tiruvallur

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் டிஆர்பி ராஜா தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவள்ளூர் : தமிழ்நாடு அரசின் நிதி மதிப்பீடுகளை ஆராய 19 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட பேரவையில் நிதி மதிப்பீட்டுக் குழு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா தலைமையில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி, கோவை வடக்கு அம்மன் கே அர்ஜுனன், சேலம் மேற்கு அருள், கும்பகோணம் அன்பழகன், தளி ராமச்சந்திரன், திருச்செங்கோடு ஈஸ்வரன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் எழிலரசன், வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார், திருவிக நகர் தாயகம் கவி, பழனி செந்தில்குமார், நாகப்பட்டினம் முகமது ஷாநவாஸ், மயிலாடுதுறை ராஜ்குமார், மதுரை மேற்கு ராஜி உள்ளிட்ட 19 உறுப்பினர்களை கொண்டது இந்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு.

சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

இந்த குழுவானது, திருவள்ளூர் பூந்தமல்லி படூர் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணிகள், பண்ணை குட்டை, ஜல் ஜீவன் மிஷன் திட்ட பணிகள், ஈக்காடு பகுதியில் தோட்டக்கலைத் துறையின் பண்ணை, திருவள்ளூர் கொழுந்தலூர் பகுதியில் அரசு விதைப்பண்ணை, விதை சுத்திகரிப்பு நிலையம், திருவலாங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பாடு, திருவலாங்காடு ஊரக சாலை திட்டத்தில் கட்டப்பட்டு வரும் பாலம் ஆகியவற்றை காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈக்காடு கண்டிகை தோட்டக்கலை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட போது தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரிஆனி தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து குழுவினரிடையே விளக்கிக் கூறினார். இதை தொடர்ந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த US 341 மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், பனை செடிகள் ஆகியவற்றை குழுவினர் விவசாயிகளுக்கு வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதுகுறித்து குழுவினர் கூறும்போது, சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கைக்காக நாங்கள் அனைத்து பகுதியிலும் ஆய்வு செய்து வருகிறோம். இதன் அறிக்கையை சட்டப்பேரவையில் நாங்கள் ஒப்படைப்போம். தற்போது நடைபெற்று வரும் பணிகள் மற்றும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள் மற்றும் திட்டத்தின் காலவரையறை அதன் பயன் திட்டத்தின் செயல்முறை, வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், இதுகுறித்த கலந்துரையாடல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எடுக்கப்படும் முடிவுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் துறைகளின் செயல்பாடுகள், ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இதையும் படிங்க : இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா - பூங்கொத்து வழங்கி பாராட்டிய ரேலா மருத்துவமனை தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.