ETV Bharat / state

கல்லூரி மாணவி மரணம்: சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

author img

By

Published : Feb 21, 2022, 10:20 PM IST

சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்
சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

திருவள்ளூரில் கல்லூரி மாணவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என மாணவியின் உறவினர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை: திருவள்ளூர் பூண்டி அடுத்த வெள்ளாத்துக் கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்திவருகிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த கல்லூரி மாணவி கடந்த வாரம் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உறவினர்கள் அந்த மாணவியின் மரணத்திற்கு நீதி விசாரணை தேவை என்று மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தனர்.

இருந்தபோதிலும் பயன் இல்லாத காரணத்தால் இன்று (பிப்ரவரி 21) சென்னை தலைமைச் செயலகத்திற்கு முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு வழங்க வந்தனர். அப்போது, காவல் துறையினர் அவர்களை அனுமதிக்காததால் குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய மாணவியின் உறவினர், “மாணவி இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும், அந்தப் போலி சாமியாரிடம் 30 குழந்தைகள் இருக்கின்றனர், அவர்களைக் காப்பாற்றுங்கள்.

சிபிஐ விசாரணை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்

நாங்களும் எல்லா இடத்திலேயும் புகார் அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை. இப்போது முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுத்திருக்கிறோம். தயவுசெய்து போலி சாமியார்களிடம் இருக்கும் அந்த 30 குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.