ETV Bharat / state

மைக்கேல்பட்டியில் சிபிஐ: மாணவி லாவண்யா மரணம் குறித்து விசாரணை

author img

By

Published : Feb 21, 2022, 4:38 PM IST

Updated : Feb 21, 2022, 8:59 PM IST

தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா மரணம் குறித்து சிபிஐ இணை இயக்குநர் வித்தியா குல்கர்னி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளியில் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை

தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த மாணவி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ஜனவரி 15ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி ஜனவரி 19ஆம் தேதி மாணவி உயிரிழந்தார். மாணவி லாவண்யா மரணத்திற்கு விடுதி காப்பாளர் துன்புறுத்தியதாகவும், வேலை வாங்கியதாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சகாயமேரி என்பவரைக் கைதுசெய்தனர்.

சிபிஐ விசாரணை

பள்ளி மாணவி உயிரிழப்பு

இந்நிலையில் மாணவி இறந்து ஒரு சில மணி நேரங்களில் தன்னை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக அவர் பேசும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

ஆனால், நீதிமன்றம் விசாரிக்காத நிலையில் அமைச்சர்களும், உரிய முறையில் விசாரிக்க வேண்டிய காவல் உயர் அலுவலர்களும், மதமாற்றம் காரணமாக மாணவி மரணம் அடையவில்லை என்ற முன்முடிவுக்கு வந்தது சந்தேகத்தை அதிகரித்தது.

இதையடுத்து பள்ளி நிர்வாகம் தங்களது மகளை மதம் மாற வற்புறுத்தியதாகவும், இது தொடர்பான சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரிக்க வேண்டும் எனவும் லாவண்யாவின் பெற்றோர், அரசியல் கட்சியினர், இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிமன்றம், அதன் உண்மைத்தன்மை முழுமையாக வெளிக்கொணரும்வகையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை

இதனை அடுத்து சிபிஐ இணை இயக்குநர் வித்தியா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மைக்கேல்பட்டி பள்ளியில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த குற்றஞ்சாட்டப்பட்ட சகாயமேரியை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சால்வை அணிவித்து வரவேற்றிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இறந்த மாணவியின் தந்தை திமுகவின் தொண்டர் என்பது கூடுதல் தகவல்.

இதையும் படிங்க: திமுக நிர்வாகியைத் தாக்கியதாக ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு!

Last Updated :Feb 21, 2022, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.