ETV Bharat / state

திருவள்ளூரில் 15ஆம் நூற்றாண்டு கால மூத்தத் தேவி அம்மன் சிலை கண்டெடுப்பு

author img

By

Published : May 18, 2022, 6:32 PM IST

மூத்த தேவி அம்மன் சிலை கண்டெடுப்பு
மூத்த தேவி அம்மன் சிலை கண்டெடுப்பு

திருவள்ளூரில் 15ஆம் நூற்றாண்டு கால மூத்தத் தேவி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட நிலையில் அந்தச் சிலைக்கு கிராம மக்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபாடு செய்தனர்.

திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம் கலியனூர் கிராமத்தில் கைலாசநாதர்கோயில் உள்ளது. இந்தக் கோயில் குளத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் இன்று (மே18) காலை பெண்கள் பணியில் ஈடுபட்ட போது கடப்பாரையில் பள்ளம் தோண்டினர்.

அப்போது கீழே சிலை ஒன்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து கோயில் நிர்வாகி லட்சுமணனிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து கோயில் நிர்வாகி லட்சுமணன் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து வட்டாட்சியர் வருவதற்குள் கிராம மக்கள் அந்த கற்கால அம்மன் சிலையை எடுத்து மஞ்சள், குங்குமம் பூசி கற்பூரம் ஏற்றி வழிபட தொடங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் பழங்கால அம்மன் கற்சிலையை ஆய்வு செய்தார்.

அப்போது கலியனூரிலுள்ள கோயிலில் வைத்து பூஜை செய்ய கோயில் நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் பெண்ணுக்கு சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைடுத்து கற்சிலையை பார்வையிட்ட தொல்லியல் துறையினர் இது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், ஸ்ரீதேவியின் மூத்தச் சகோதரி மூத்தத் தேவியின் சிலை என்றும் தெரிவித்தனர்.

மூத்த தேவி அம்மன் சிலை கண்டெடுப்பு

மேலும், பல்லவர்கள் காலத்தில் செல்வத்திற்காகவும் வளத்திற்காகவும் நீர்நிலைகளில் வைத்து வழிபட்டு வந்ததாகவும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பெரும்பாக்கம் தென் திருவள்ளூர் போன்ற இடங்களில் வைத்து வழிபாடு செய்திருப்பதாகவும் தெரிவித்ததோடு மூத்தத் தேவியின் கையில் இருப்பது மகன் மாந்தன், மகள் மாந்தி என்றும் பாற்கடலில் அமிர்தம் கரைத்த போது ஸ்ரீதேவிக்கு முன் வந்ததால் மூத்தத் தேவி என்ற அழைப்பதுண்டு என்றும் பல்லவர்கள் காலத்தில் வணங்கிய தெய்வம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜவுளிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி புதிய துணிகள் வாங்கிய ரவுடிகள் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.