ETV Bharat / state

ஜவுளிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி புதிய துணிகள் வாங்கிய ரவுடிகள் - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

author img

By

Published : May 18, 2022, 5:58 PM IST

சென்னையில் கத்தியை காட்டி மிரட்டி துணிக்கடையில் புதிய துணிகளை வாங்கிவிட்டு சென்ற ரவுடிகளை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் நல்லதம்பி சாலையில் அப்துல் ரஹ்மான் என்பவர் புதியதாக துணி கடை ஆரம்பித்து நான்கு மாதங்களாக நடத்திவருகிறார். இந்தத் துணிக்கடைக்கு வந்த நான்கு பேர் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு புதியதாக துணி எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தாமல் வெளியே செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது, கடையில் வேலை செய்யும் நபர் ஒருவர் வாங்கிய துணிக்கான பணத்தை செலுத்துமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள், பட்டாகத்தி கையில் இருப்பதாகவும் இப்போதுதான் ஜெயிலில் இருந்து வெளி வந்து, புதிய துணி இல்லாததால் வாங்க கடைக்கு வந்ததாகவும் கூறி மிரட்டிவிட்டுச் சென்றனர்.

உடனே இது குறித்து கடை உரிமையாளர் சங்கர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் கடைக்கு வந்த காவல் துறையினர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து அதில் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்

கடந்த சில நாள்களாகவே சென்னை புறநகர் பகுதிகளில் கடைகளில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: ரூட் தல விவகாரம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.