ETV Bharat / state

சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா

author img

By

Published : Aug 3, 2019, 2:31 PM IST

ஆடித்தபசு திருவிழா

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சமேத சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை 5.30 மணிக்கு கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழா

இந்தத் திருவிழா 12 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இவ்விழாவைக் காண உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைபுரிவர்.

Intro:சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.Body:சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.


தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உங்களில் ஒன்றாக மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் சமேத சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது இந்தக் கோவிலில் அரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து 12 நாள்கள் ஆடித்தவசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்
தினமும் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு இரவில் அம்மாள் வீதி உலாவும் நடைபெறும்.
நா வின் முக்கிய நிகழ்வான நாள் திருவிழா அன்று தேரோட்டமும் இரவில் கோமதி அம்மாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு திருவிழா வரும் 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதில் சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியே ஆடித்தபசு நிகழ்ச்சியாக இவ்விழாவை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இவ் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை யினரும் விழா கமிட்டியினரும் செய்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.