ETV Bharat / state

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்..!

author img

By

Published : Mar 3, 2022, 8:00 AM IST

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்..!
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்..!

நெல்லையில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுகவைச் சேர்ந்த வெற்றி பெற்ற சுயட்சை வேட்பாளரை திமுக நிர்வாகிகளே கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பேரூராட்சி 9வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அகமது காதர் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று(மார்ச்.2) பேரூராட்சி கவுன்சிலராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து, வெற்றியைக் கொண்டாடும் வகையில் அகமது காதர் இன்று திமுகவைச் சேர்ந்த தனது நண்பர் ராகவன் பொன் கனகராஜ் உள்ளிட்ட தனது ஆதரவாளர்களுக்கு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் வைத்து விருந்து வைத்துள்ளார்.

அங்கு அனைவரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகி வி.பி.ஆர்.விஜயன் தனது ஆதரவாளர்களுடன் சென்று அகமது காதர் தரப்பினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் வி.பி.ஆர்.விஜயன் தரப்பினர் பிரியாணி தட்டை எடுத்து ராகவன் பொன் கனகராஜ் மீது ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த ராகவனை, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த ராகவனுக்கு, முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. அதேபோல் அருகிலிருந்த கவுன்சிலர் அகமது காதருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கவுன்சிலர் அகமது காதர் கூறுகையில், ”அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான விபிஆர்.விஜயனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளரான ராகவன் பொன் கனகராஜூக்கும் இடையே நீண்ட நாளாக முன்விரோதம் இருந்து வந்தது.

பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல்

என்னையும் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடக் கூடாது என விஜயன் தரப்பினர் மிரட்டினர். ஆனாலும் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இந்த சூழலில் நாங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வி.பி.ஆரின் தரப்பினர் திடீரெனப் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். எனவே காவல்துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே பல மாவட்டங்களில் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மறைமுக தேர்தலுக்காகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகப் புகார்கள் எழுந்து வரும் நிலையில் தேர்தல் பகைக் காரணமாக திமுக நிர்வாகியை ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே கொடூரமாகத் தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'ரஷ்யா - உக்ரைன் போருக்குக்கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே காரணமென வழக்கு போடலாம்' - ஜெயவர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.