ETV Bharat / state

வராக நதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்து செல்லப்பட்ட தென்னை மற்றும் இலவ மரங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 2:59 PM IST

நீரில் அடித்து செல்லப்பட்ட தென்னை மற்றும் இலவ மரங்கள்
வராக நதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

flood warning in Varaha and Kottagudi River: தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வராக நதி, மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வராக நதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வராக நதி, கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்த நிலையில் காலையிலும் தொடர்ந்து வருகிறது. இதனால் கல்லாறு, செழும்பாறு, கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வராக நதியில் வெள்ளப்பெருக்கு: மேலும் சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு, உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்கிறது. இதனால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வராக நதி ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதையும் படிங்க: முழுக் கொள்ளளவை நெருங்கிய வைகை அணை!- வெள்ள அபாய எச்சரிக்கை

கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேலும் இந்த தொடர் மழையால் போடியின் முக்கிய நீர்வரத்து பகுதியான கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொட்டகுடி ஆறு பெரியாற்றுப்பாலம் அருகே உள்ள ஆற்றங்கரை ஓர விவசாய நிலங்களில் உள்ள தென்னந்தோப்பின் கரையோரப் பகுதியில் இருந்த சுமார் பத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் 60 அடி உயர இலவ மரங்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதனால் கொட்டகுடி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள தென்னை விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர். மேலும் ஆற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ ஆற்றின் அருகே சென்று செல்பி எடுக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு: தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.