ETV Bharat / state

'2021 தேர்தலில் ஓபிஎஸ்ஸின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்படும்!'

author img

By

Published : Nov 21, 2020, 5:45 PM IST

thanga tamilselvan
thanga tamilselvan

தேனி: வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்டப்படும் என தேனி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள பொட்டிபுரம் பகுதியில் பெய்த கனமழையால் விளைநிலங்களுக்குள் மழைநீர் செல்வதை தடுக்க அப்பகுதி விவசாயிகள் ஓடைக்கரைகளை பலப்படுத்தினர். இதனை சட்டவிரோதமாக ஓடை மண் அள்ளப்படுவதாக பொட்டிப்புரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா காவல் துறையினர் ஜேசிபி ஓட்டுநர் மணிகண்டனை கைதுசெய்தனர்.

தொடர்ந்து ஜேசிரி உரிமையாளர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரது வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். இந்நிலையில், திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் இன்று (நவ.21) சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு அப்பகுதி விவசாயிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தனக்கு பள்ளி, கல்லலூரிகளில் சிறந்த மாணவனுக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல மனிதர் என்ற பெயர் இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரும் சான்று எனக்குத் தேவையில்லை.

2021 தேர்தலோடு ஓபிஎஸ்ஸின் அரசியலுக்கு முடிவு கட்டப்படும்

தினகரன், சசிகலா ஜெயலலிதா, மோடியைத் தொடர்ந்து அமித் ஷா வரை பதவிக்காக அவர்களது கால்களில் விழுந்து துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ் போன்று எனக்கு நடிக்கத் தெரியாது.

வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தோல்வியடைந்து அவரது அரசியலுக்கு முடிவு கட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.