ETV Bharat / state

Ooty:தாவரவியல் பூங்காவில் 2ஆம் சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணிகள் துவக்கம்!

author img

By

Published : Jul 17, 2023, 3:18 PM IST

Updated : Jul 17, 2023, 4:08 PM IST

planting of flower seedlings
தாவரவியல் பூங்கா மலர் நாற்றுகள் நடவும் பணி

உதகை(ooty) அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (ஜூலை 17) துவக்கி வைத்தார்.

தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக மலர் நாற்றுகள் நடவும் பணி துவக்கம்

நீலகிரி: 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் நீலகிரி(Ooty) மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருவது வழக்கம்.

குறிப்பாக இரண்டாம் சீசனின்போது உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், பூனே, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுனியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டும் மற்றும் பூங்காவிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டும் சுமார் 4 லட்சம் வண்ண மலர்ச்செடிகள் இரண்டாவது பருவ மலர் கண்காட்சிக்காக மலர் பாத்திகளில் நடவு பணியும், 15ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி, ஆலந்தூரியம் போன்ற 30 வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணியும் இன்று துவங்கியது.

இந்த மலர்த்தொட்டிகள் மலர் காட்சி திடலில் அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம் வரை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இரண்டாம் சீசனுக்கான மலர் நாற்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.பி. அம்ரித் இன்று துவக்கி வைத்தார்.

மேலும், இரண்டாம் சீசனுக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் துரைசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் கே.பிரபாகர், உதகை நகர மன்றத் தலைவர் வாணிஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த தாவரவியல் பூங்காவிற்கு நூறாண்டுகள் பழமையான மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.

இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ஜூலை 14ஆம் தேதி கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

இதையும் படிங்க:Opposition Meeting: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்.. யார் யார் பங்கேற்பு?

Last Updated :Jul 17, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.