ETV Bharat / state

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியத்தில் மூதாட்டி உயிரிழப்பு.. 14 ஆடுகளும் உயிரிழந்த சோகம்! - Thunder and lightning attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:55 PM IST

Thunder and lightning attack: தூத்துக்குடி மாட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் பகுதியில் இடி, மின்னல் தாக்கியத்தில் மூதாட்டி மற்றும் அவர் வளர்த்த 14 ஆடுகள் உயிரிழந்தது.

மின்னல் தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் புகைப்படம்
மின்னல் தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் புகைப்படம் (Credit: ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு திட்டக்குளம் பகுதியைச் சார்ந்தவர் ஆச்சியம்மாள் (63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், ஆச்சியம்மாள் வழக்கம்போல் நேற்று (மே 18) ஆடு மேய்க்கச் சென்றுள்ளார்.

அப்போது இரவு நேரத்தில் வீடு திரும்பும் பொழுது, இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் ஆச்சியம்மாள் மற்றும் அவரது 17 ஆடுகளும் வடக்கு திட்டங்குளம் காட்டுப் பகுதியில் இருந்த சிதலமடைந்த கட்டிடத்தில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர். இந்த நிலையில், கட்டிடத்தில் மின்னல் தாக்கியதில் ஆச்சியம்மாள் மற்றும் 14 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் உயிர் தப்பிய 3 ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளது. இதனைக் கண்ட ஆச்சியம்மாள் குடும்பத்தினர், ஆச்சியம்மாளை தேடியுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் இருந்த சிதலமடைந்த கட்டடத்தில் ஆச்சியம்மாள் மற்றும் 14 ஆடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, இறந்த ஆடுகளையும் கணக்கீடு செய்து கால்நடை மருத்துவருக்கு தகவல் வழங்கி, ஆடுகளை உடற்கூறு ஆய்விற்கு உட்படுத்தியுள்ளனர். மேலும், காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நள்ளிரவில் பெய்த கனமழையின் போது வீட்டின் மீது இடி, மின்னல் தாக்கியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் தனபால். இந்நிலையில், அப்பகுதியில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது.

அப்போது தனபாலின் வீட்டின் மீது இடி, மின்னல் தாக்கியத்தில், வீட்டில் இருந்த குருபிரசாத் மற்றும் விக்ரம் ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் பெருமாள் என்பவருக்குச் சொந்தமான பசு மாடு உயிரிழந்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் 20.46 செ.மீ மழை பதிவு.. பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்வு.. - Rainfall Measurement In Tirunelveli

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.