ETV Bharat / state

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

author img

By

Published : May 29, 2019, 4:29 PM IST

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

நீலகிரி: பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் 341 தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து சம்மந்தப்பட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காண்ப்பாளர் சண்முகபிரியா, போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 341 தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, காவல்துறை கண்காண்ப்பாளர், போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இதில் வாகனத்தின் தரம், உரிமம், முதலுதவி சிகிச்சைப் பெட்டி, அவசர கால வழி உள்ளிட்டவைகள் தரமாக இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அங்கீகாரம் இல்லாத 26 பள்ளிகளில் மணவர்கள் சேர்க்கை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

உதகை                                       29-05-19
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் 341 வாகனங்களை மாவட்ட  ஆட்சிதலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உதகையில் ஆய்வு செய்தனர். அங்கீகாரம் இல்லாத 26 பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கைவிடுத்துள்ளார்….
  தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜீன் 3-ம் தேதி  திறக்கபட உள்ள நிலையில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் 341 வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள்  உதகையில் உள்ள அரசு கலைகல்லூரி மைதானத்திற்கு கொண்டு வரபட்டு வரிசையாக நிறுத்தி வைக்கபட்டன.
   இந்த வாகனங்களை நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  அப்போது பேருந்தின் படிகட்டுகள், அடித்தலம், இருக்கைகள் போன்றவைகள் சரியாக உள்ளதா? என சோதனை செய்யபட்டது. அத்துடன் தீயணைப்பு கருவி, அவசர கால வழி, வேக கட்டுபாட்டு கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி போன்றவைகள் சரியாக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யபட்டது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 26 பள்ளிகளில் மணவர்கள் சேர்க்கை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என மாவட்ட ஆட்சிதலைவர் எச்சரித்துள்ளார்.
பேட்டி: இன்னசன்ட் திவ்யா - நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.