ETV Bharat / state

நீலகிரி மலை ரயிலில் முதல்முறையாக 'பிரேக்ஸ் உமன்' நியமனம்!

author img

By

Published : Jun 17, 2022, 8:17 PM IST

நீலகிரி மலை ரயிலில் முதல் முறையாக 'பிரேக்ஸ் உமன்' நியமனம்
நீலகிரி மலை ரயிலில் முதல் முறையாக 'பிரேக்ஸ் உமன்' நியமனம்

நீலகிரி மலை ரயிலில் முதல்முறையாக 'பிரேக்ஸ் மென்' பணிக்கு 45 வயதான பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி: ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில், பல் சக்கரங்கள் உதவியுடன் நூற்றாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. மலைப்பாதையில் ரயில் இயக்க ’பிரேக்ஸ் மென்’ பணி மிக முக்கியமானது. மலை ரயிலின் பெட்டிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, 'பிரேக்' பிடித்து இயக்கப்படுகிறது. இதற்காக, ரயிலில், ஒவ்வொரு பெட்டிக்கும் ஒரு 'பிரேக்ஸ் மேன்' உள்ளனர்.

இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த இப்பணியில் முதல் முறையாக குன்னூரைச் சேர்ந்த 45 வயதான சிவஜோதி என்ற பெண் 'பிரேக்ஸ் உமனாக' பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக இவர் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணியாற்றி வந்தார்.

அண்மையில், தென்னக ரயில்வே இவரை இப்பணியில் அமர்த்தி மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளித்தது. தற்போது, ஊட்டி - குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் இவர் பணியைத் தொடங்கி உள்ளார்.

நீலகிரி மலை ரயிலில் முதல் முறையாக 'பிரேக்ஸ் உமன்' நியமனம்

இதையும் படிங்க: மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு - மெல்லிசையால் மயக்கியவரை வாழ்த்தி வழி அனுப்பிய பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.