ETV Bharat / state

சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு… சீசனால் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!

author img

By

Published : Apr 25, 2023, 7:55 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து உள்ள நிலையில் நீலகிரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

நீலகிரி: கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாகச் சென்று வருகின்றனர்.

நாளை இரவு 12 மணி முதல் கோடை சீசன் முடியும் வரை உதகையிலிருந்து கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், அதேபோல் உதகைக்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் சாலையில் வரும் வகையிலும் ஒருவழிப் பாதையாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பகல் நேரங்களில் உதகையில் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் அனைத்து தரப்பினரிடையே நடந்த கருத்து கேட்புக் கூட்டத்திற்குப் பின் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஒருவழிப் பாதைகளுக்கான இந்த தகவலை தெரிவித்தார். மேலும் கோடை சீசன் காரணமாக உதகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது; சுற்றுலாப் பயணிகள் தேவைகளுக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 26 நாட்களாக தொடரும் நீலகிரி பூங்கா ஊழியர்கள் போராட்டம் - ஒருவர் பலி!

இதையும் படிங்க: உதகையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.. சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.