ETV Bharat / state

ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி - ஆட்சியர் நேரில் ஆய்வு!

author img

By

Published : Oct 16, 2019, 3:26 PM IST

annadurai

தஞ்சாவூர்: குந்தவை நாச்சியார் கல்லூரி வளாகத்திலுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படியில் இன்று, குந்தவை நாச்சியார் கல்லூரியிலுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டடம், வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அங்குச் சென்ற அவர் விடுதியின் சமையற் கூடம், உணவுக் கூடம், மொட்டை மாடி, கழிவறை, நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆய்வுசெய்தார். இதனைத்தொடர்ந்து அவர் இவை அனைத்தையும் சுகாதாரமாக நீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுமாறு சம்பத்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

thanjavur
மாணவியர்களிடம் விடுதியை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தபோது

மேலும், அவர் விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவியர்களிடம் விடுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோ, சுகாதார பணிகள் துணை இயக்குநர் ரவீந்திரன், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

Intro:
தஞ்சாவூர் அக் 15



தஞ்சாவூர் குந்தவை நாச்சியார்; கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்Body:.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி கட்டடம் மற்றும் வளாகத்திற்குள் டெங்கு கொசு புழுக்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் விடுதி கட்டட அறைகள் மற்றும் வளாகத்தினை துய்மையாக பராமரித்து தண்ணீர் தேங்காதவாறு பார்த்துகொள்ளும்படி விடுதி காப்பாளரை அறிவுறுத்தினார். மேலும், மாணவியர் விடுதியின் சமையற் கூடம், உணவு கூடம், மொட்டை மாடி, கழிவறை, சுற்றுபுறம் ஆகியவற்றை சுகாதாரமாக வைத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.         
மாணவியர் விடுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யுமாறும், தண்ணீரை குளோரினேஷன் செய்யுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். விடுதியில் தங்கி பயிலும் கல்லூரி மாணவியர்களிடம் விடுதியை தூய்மையாக வைத்து கொள்வதன் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் எடுத்துரைத்தார்.
இவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திருமதி ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோ, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ரவீந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.