ETV Bharat / state

ராகுல் சிறை...ரயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ். அழகிரி - நக்கலடித்த அண்ணாமலை!

author img

By

Published : Mar 23, 2023, 4:35 PM IST

Etv Bharat
Etv Bharat

குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ரயில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ரயில் மறியலில் ஈடுபட்ட கேஎஸ் அழகிரி

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 நிமிடங்கள் பின் தாமதமாக சோழன் விரைவு வண்டி சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

கும்பகோணத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று (மார்ச் 23) வெளியான தீர்ப்பில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகள் தண்டனை என அறிவிக்கப்பட்டது கண்டித்து திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சோழன் விரைவு ரயிலை கும்பகோணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மத்திய அரசுக்கு முழக்கங்களை எழுப்பினர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக சோழன் விரைவு ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. அதே ரயிலில் கேஎஸ் அழகிரியும் ஏறிச் சென்றார்.

இந்நிலையில் இதுகுறித்து, பாஜக மாநிலத்தலைவர் பகடி செய்து, ட்விட் செய்துள்ளார்.

  • TN Congress chief Thiru KS Alagiri, generally a spokesperson of the DMK, jumped into a protest after Rahul Gandhi was handed 2 years imprisonment by a Gujarat court.

    The number of media personnel covering this protest exceeds the number of people protesting. pic.twitter.com/6Bh3TxICIl

    — K.Annamalai (@annamalai_k) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது, ''ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, பொதுவாக திமுகவின் செய்தித் தொடர்பாளரான தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே.எஸ்.அழகிரி போராட்டத்தில் குதித்தார்.

இந்த போராட்டத்தை செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை, போராட்டம் நடத்தும் மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது'' என கிண்டல் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றிய தமிழ்நாடு சட்டப்பேரவை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.