ETV Bharat / state

கிராமங்களில் தங்கி பணிபுரியாத அலுவலர்கள் மீது நடவடிக்கை!

author img

By

Published : Jul 26, 2019, 9:35 AM IST

thanjavur collector office

தஞ்சை: கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்ட செய்தி குறிப்பில், 'அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு வகிக்கும் கிராங்களில் தங்கி பணிபுரிவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணித்தலுக்கு உட்படுத்தவும் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜூலை 1ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள கிராமங்களில் தங்கி பணிபுரியவில்லையெனில், மக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தலைவராகவும், அலுவலக மேலாளர், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

புகார்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், குறைதீர் குழு அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் புகார்களை அனுப்பலாம்' என தெரிவிக்கப்பட்டடுள்ளது.

Intro:தஞ்சாவூர் ஜுலை 25


கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் தஞ்சை ஆட்சியர்
அண்ணாதுரை தகவல்Body:



தஞ்சாவூர் மாவட்டம், கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

         அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிராங்களில் தங்கி பணிபுரிவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணித்தலுக்கு உட்படுத்தவும் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 01.07.2019 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில்; பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை தலைவராகவும், அலுவலக மேலாளர் (பொது) மற்றும் தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


         தஞ்சாவூூர் மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியவில்லை எனில், அது தொடர்பாக “ தலைவ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), குறைதீர் குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு பொது மக்கள் தங்களின் புகார்களை அனுப்பலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.