ETV Bharat / state

குளு குளு குற்றால அருவிகள் - கோடை விடுமுறையை கொண்டாட பொதிகை மலை பற்றிய சிறப்பு தொகுப்பு

author img

By

Published : Jun 4, 2022, 7:22 AM IST

தென்காசியில் குளு குளு குற்றால அருவிகள்
தென்காசியில் குளு குளு குற்றால அருவிகள்

தென்றல் தவழும் தென்காசியில் குளு குளு குற்றால அருவிகள்... தாமிரபரணி பாய்ந்தோடும் நெல்லையில் களக்காடு முண்டந்துறை... கோடை விடுமுறையை கொண்டாட பொதிகை மலையை சுற்றி பார்க்கலாம் வாங்க..

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தொற்று கட்டுக்குள் இருப்பதால் சுற்றுலாத்தலங்கள் உள்பட பொது இடங்களில் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு விரும்பிய சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து செல்வதை காணமுடிகிறது.

தென்காசியில் குளு குளு குற்றால அருவிகள்

அந்த வகையில் தென்றல் தவழும் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் இந்த ஆண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அனைவரும் குளிப்பதற்காக வந்து செல்கின்றனர். தென்காசி என்றாலே சிலு சிலுவென காற்றை அள்ளி வீசும் பொதிகை மலை தான் ஞாபகத்துக்கு வரும். பொதிகை மலையில் பல பொக்கிஷங்கள் கொட்டி கிடக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை எனப்படும் இம்மலையில் தான் வற்றாத நதியான தாமிரபரணி உற்பத்தியாகிறது. மருத்துவ குணம் கொண்ட பல மூலிகை செடிகளும் இங்கு தான் உற்பத்தியாகிறது. கலோனோவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் அவர்களை நம்பி அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குற்றாலத்தை பொருத்தவரை ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்கள் தான் சீசன் நடெபெறும். எனவே அப்போது மட்டும் தான் வியாபாரம் நடக்கும் எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக சீசன் தடைபட்டதால் வியாபாரிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கரோனோவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வியாபாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டோம்.

தற்போது சீசன் தொடங்கியுள்ளது பொதுமக்களும் குளிக்க வருவதால் வியாபாரம் நல்ல முறையில் நடைபெறுகிறது. இங்கு மட்டுமே கிடைக்கும் பழங்கள் விற்பனைக்கு வைத்துள்ளோம். வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து விட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று தெரிவித்தனர்.

குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவி, தேனருவி பழந்தோட்ட அருவி, ஐந்தருவி, புலியருவி உள்பட ஒன்பது அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் பொதுமக்கள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். அருவிகள் மட்டுமல்லாமல் பிரத்யேகமாக கிடைக்கும் பல பழ வகைகளும் குற்றாலத்தில் புகழ் பெற்றதாக உள்ளது.

அந்த வகையில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டுமே விளையும் துரியன் பழம் மங்குஸ்தான் ரம்தா இந்த மூலிகையை பழங்கள் வழக்கம்போல் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர மண் மணம் மாறாத பனை பொருட்களான நுங்கு, பதநீர், இளநீர் உள்ளிட்ட விற்பனையும் அதிகரித்துள்ளது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் சாலைகளில் ஆங்காங்கே இயற்கை பாணங்களான நொங்கு பதநீர் விற்கப்பட்டு வருகிறது.

வெளியூரிலிருந்து வரும் தங்களுக்கு நுங்கு பதநீர் போன்ற இயற்கை பாணங்கள் மிகவும் பிடித்திருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பாண்டிச்சேரியை சேர்ந்த சித்ரா கூறுகையில், நாங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருந்து குற்றாலத்தில் குளித்து வருகிறோம். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

இரண்டு ஆண்டுக்கு பிறகு தற்போது சீசன் தொடங்கியது வரும் வழியில் நுங்கு பதநீர் வாங்கி சாப்பிட்டோம் இங்குள்ள இயற்கை சூழல் மிகவும் ரம்மியமாக உள்ளது என்று தெரிவித்தார். குற்றாலத்தில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பாபநாசம் காரையாறு, அணை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் கோயில் என பல்வேறு இடங்கள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றா நதியான தாமிரபரணி நதி நெல்லை வழியாக பாந்தோடுகிறது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் மாஞ்சோலை நாலு முக்கு குதிரவெட்டி ஆகிய இடங்களை பார்க்க வேண்டும்.

இங்கே தங்குவதற்கும் வனத்துறை சார்பில் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. kmtr என்ற இணையதள பக்கத்தில் சென்று முன்பதிவு செய்யலாம். குதிரவெட்டி என்பது டவர் பாய்ண்ட் அங்கிருந்து ஒட்டுமொத்த மலை அழகையும் ரசிக்கலாம். அப்டியே கீழே இறங்கினால் மணிமுத்தாறு அருவியில் ஆனந்த குளியல் போடலாம்.

அதேபோல் அகஸ்தியர் அருவி களக்காடு தலையணை என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளது. எனவே குற்றாலத்தில் குளிக்க வரும் பயணிகள் அருவியில் ஆனந்த குளியல் போட்டுவிட்டு செங்கோட்டைக்கு நேராக சென்ற அங்கு புகழ்பெற்ற பார்டர் பரோட்டா கடையில் சுவையான பரோட்டவை ருசிக்கலாம். பின்னர் அங்கிருந்து கிளம்பி அருகிலுள்ள நெல்லையில் பிற சுற்றுலாத்தலங்களையும் சுற்றி பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆந்திராவில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவலநிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.