ETV Bharat / state

சங்கரன்கோவில்: எளிமையாக நடைபெற்ற ஆடித்தபசு திருவிழா!

author img

By

Published : Aug 3, 2020, 9:00 AM IST

Updated : Aug 3, 2020, 9:34 AM IST

தென்காசி: சங்கரன்கோவில், சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா எளிமையாக நடைபெற்றது.

சுவாமி
சுவாமி

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். சுமார் 12 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழாவில் சுவாமி, அம்பாள் காலை, மாலை என்று இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உலா வருவார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு ஆடித்தவசு திருவிழா கரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் இல்லாமல் கோயிலுக்குள் உள்திருவிழாவாக நடைபெற்றது.

அதன்படி கோயில் வளாகத்தில் சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணசுவாமி, கோமதி அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்கக் கும்ப பூஜை நடத்தப்பட்டு சுவாமி , அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பனிமய மாதா ஆலய திருவிழாவில் கட்டுப்பாடு: கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தகவல்

Last Updated :Aug 3, 2020, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.