ETV Bharat / state

நகை கடன் தள்ளுபடி: இந்தியாவிலேயே இதுவே முதல் முறை - அமைச்சர் ஐ.பெரியசாமி

author img

By

Published : Mar 27, 2022, 11:28 AM IST

பொது நகை கடன் தள்ளுபடி இந்தியாவிலேயே இதுவே முதல் முறை எனவும் வேறு எந்த மாநிலத்திலும் இது இல்லை என்றும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பொது நகை கடன் தள்ளுபடி இந்தியாவிலேயே இதுவே முதன் முறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை
பொது நகை கடன் தள்ளுபடி இந்தியாவிலேயே இதுவே முதன் முறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கிகள் சார்பில் அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி ஆணையினை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 8 லட்சம் மதிப்பிலான நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்களுடன் நகைகளையும் வழங்கினார்கள்.

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியசாமி, "பொது நகை கடன் தள்ளுபடி என்பது ஒரு சாதனை. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அது நடைபெற்று உள்ளது. நகை கடன் தள்ளுபடி கேட்டு தகுதியுள்ள நபர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம். நகை கடன் தள்ளுபடியால் ஏழை எளிய மக்கள் மிகவும் பலன் அடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை எண்ணெய் நிறுவன குடோனில் தீ விபத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.