ETV Bharat / sports

தடைகளை உடைத்தெறிந்து டேபிள் டென்னிஸ் உலகில் சாதனை படைத்த மணிகா பாத்ரா! - Table tennis Manika Batra

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 12:46 PM IST

Manika Batra: இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ரா, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 24வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

மணிகா பாத்ரா
மணிகா பாத்ரா (Credits - ETV Bharat Tamil Nadu)

ஹைதராபாத்: இந்தியாவின் டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த மணிகா பாத்ரா தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெல்லியை பூர்விகமாக கொண்ட மணிகா, கிரிஷ் மற்றும் சுஷ்மா தம்பதிக்கு 3 குழந்தைகளில் ஒருவராக பிறந்தார். முதன்முதலில் சிலி ஓபனில் வெற்றி பெற்ற மணிகா பின்னர் பல்வேறு வெற்றிகளை பெற்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடினார்.

ஒலிம்பிக், காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சமீபத்தில் சவுதி ஸ்மாஷ் போட்டியில் வெற்றி பெற்று, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 24வது இடத்திற்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

மணிகாவிற்கு சிறு வயது முதலே இந்த விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள மணிகா, “தற்போது பேட்மிண்டனில் சாதித்துள்ள பிவி சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை போல் நான் டேபிள் டென்னிஸில் சாதிக்க வேண்டும்.

எனக்கு இனிவரும் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. உலக சாம்பியன்ஷிப் அல்லது ஒலிம்பிக் என எந்த போட்டியாக இருந்தாலும் சரி, நான் ஒரே அளவு ஆர்வம் மற்றும் கவனத்துடன் மகிழ்ச்சியோக விளையாடுவேன். நான் தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து எனக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்து கொள்வேன்.

இந்த செயல்கள் என்னை மெருகேற்றி கொள்ள பயன்படுகிறது என்றார். மேலும், தனது தாயார் சுஷ்மாவின் தியாகம் நான் டேபிள் டென்னிஸில் சாதிக்க பெரும் உந்துதல் அளித்துள்ளது. எனது தந்தைக்கு மன ரீதியாக பாதிப்பு உள்ள போதும், எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாக தெளிவான முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.

நான் கல்லூரியை விட்டு விலக வேண்டும் என முடிவு எடுத்த போது, என்னுடைய தாயார் அனைத்து வகையிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் எனக்காக செய்த தியாகம் அளவிட முடியாதது. அதே நேரத்தில் நான் டேபிள் டென்னிஸில் வெற்றிகரமாக செயல்பட்டு அவருடைய கடின உழைப்பிற்கு பரிசாக சந்தோஷத்தை வழங்கி வருகிறேன்" என பேசியுள்ளார். மேலும் போட்டிகளின் போது மட்டும் சீரியஸாக இருப்பேன் எனவும், மற்ற நேரங்களில் நான் ஜாலியாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார். மணிகா பத்ரா adidas நிறுவனத்திற்கு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆர்சிபி மீது வன்மத்தைக் கக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. மீம்ஸ் மழையால் நனைந்த சோஷியல் மீடியா! - CSK Fans Troll RCB

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.