ETV Bharat / state

மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க சங்கம் தொடங்கிய அரசுப் பள்ளி!

author img

By

Published : Jul 18, 2019, 4:22 PM IST

இன்ராக்ட் சங்கம் துவக்கம்!

சிவகங்கை: மாணவர்களின் தலைமைப் பண்பு, சேவை மனப்பான்மையை வளர்க்க இன்ராக்ட் சங்கத்தை காரைக்குடி ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கியுள்ளது.

காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக படிப்பு, கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.

இன்ராக்ட் சங்கம் தொடக்கம்!

தற்போது, ஐஎஸ்ஓ தரச்சான்றையும் இப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்ப்பதற்காகவும், சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காகவும் 'இன்ராக்ட்' (INTERACT) சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஏராளமான மாணவர்கள் இன்ராக்ட் சங்க உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

Intro:சிவகங்கை

மாணவர்களின் தலைமைப் பண்பு மற்றும் சேவை மனப்பான்மை வளர்க்க இன்ராக்ட் சங்கம் துவக்கம்!

சிவகங்கை: மாணவர்களின் தலைமை பண்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதற்காக பள்ளியில் இன்ராக்ட் சங்கம் துவக்கப்பட்டது.

Body:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வருகிறது
ராமநாதன் செட்டியார் அரசு உயர்நிலைப்பள்ளி. தனியார் பள்ளிகளுக்கு நிகராக படிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகள் நிறைந்த இப்பள்ளியில் 1000 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தற்போது ISO தரச்சான்றையும் பெற்றுள்ள இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்ப்பதற்காகவும், சேவை மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காகவும் இன்று interact சங்கம் தொடங்கப்பட்டது.


Conclusion:தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், 30 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்ராக்ட் சங்க உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.