ETV Bharat / state

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அடிதடியில் ஈடுபட்டவர் கைது!

author img

By

Published : Jul 31, 2019, 4:14 PM IST

sivagangai farmers grievance meet

சிவகங்கை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருதரப்பினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது அலுவலர்ளுக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அது இரு தரப்பினருக்கிடையே மோதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டனர்.

கூச்சல், குழப்பம் அடிதடி நடந்ததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆட்சியர் ஜெயகாந்தன் இருதரப்பினரையும் சமாதானம் செய்ததையடுத்து கூட்டம் மீண்டும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோதலுக்கு காரணமான திருப்புவனத்தைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நடைப்பெற்று மோதல்
Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.31

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் இருதரப்பினரிடையே அடிதடி சம்பவம் - ஒருவர் கைது!

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இருதரப்பினர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Body:சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவிவசாயிகள் தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூட்டரங்கிலேயே அடிதடி ஏற்பட்டது. கூச்சல், குழப்பம் அடிதடி நடந்ததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இருதரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் சமாதானம் செய்ததை அடுத்து கூட்டம் மீண்டும் நடைபெற்றது.

Conclusion:இதனைதொடர்ந்து மோதலுக்கு காரணமான திருப்புவனத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.