ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: சேலம் முள்ளுவாடி கேட் ஒரு வழிப்பாதையாக மாற்றம்

author img

By

Published : Nov 27, 2019, 11:35 AM IST

சேலம்: முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

one side way
one side way

சேலம் டவுன் பகுதியில் உள்ளது முள்ளுவாடி கேட் ரயில்வே பாதை. இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரயில்வே மேம்பாலம் கட்டத் தொடங்கி இரண்டு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் பாலப் பணிகள் நிறைவடையவில்லை. இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மற்றொரு பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது.

ஒருவழிப்பாதையாக இருந்ததில் பாலம் கட்டப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் இந்த வழியே சென்று மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்கின்றனர். இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

முள்ளுவாடி கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்
முள்ளுவாடி கேட்டில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

காலை 8.30 மணி, பகல் 1.30 மணி, இரவு 9.30 மணி ஆகிய நேரங்களில் ரயில்கள் இந்த வழியே சென்று வருவதால் ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. முள்ளுவாடி கேட் பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகேயுள்ள பெரியார் மேம்பாலம் வழியே வாகனங்கள் சென்று அண்ணா பூங்கா, சுந்தர் லாட்ஜ் வழியே வாகனங்கள் செல்லவும், சுந்தரி லாட்ஜ் பகுதியிலிருந்து முள்ளுவாடி கேட் வழியே வாகனங்கள் டவுனுக்கு வரவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஈடிவி பாரத் எதிரொலி: ஒருவழிப்பாதையாக மாற்றம்

முள்ளுவாடி ரயில் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக சில நாட்களில் சேலம் மாநகர காவல்துறை முள்ளுவாடி கேட் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: சேலம் முள்ளுவாடி கேட் ஒரு வழிப்பாதையாக மாற்றம்.


Body:சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்து சேலம் மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

அஸ்தம்பட்டியில் இருந்து வரும் சேலம் பழைய பேருந்து நிலையம் வரும் வாகனங்கள் சுந்தர லாட்ஜ், தமிழ் சங்கம் ரோடு, சங்கர் நகர் ரோடு, அண்ணா பார்க், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வழியே செல்ல வேண்டும் என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சேலம் டவுன் பகுதியில் உள்ளது முள்ளுவாடி கேட் ரயில்வே பாதை இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டுப்பட்டு வருகிறது. ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்ட தொடங்கி இரண்டு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் பாலப் பணிகளின் வேலை முழுவதும் முடியவில்லை. இதனால் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மற்றொரு பாதையில் வாகனங்கள் சென்று வருகிறது.

முதலில் இந்தப் பாதை ஒரு வழி பாதையாக இருந்தது. தற்போது பாலம் கட்டப்பட்டு வருவதால் வாகனங்கள் இந்த வழியே சென்று மீண்டும் இதே வழியில் திரும்பி வருகிறது. இதனால் எப்போதும் பார்த்தாலும் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஆக காணப்படுகிறது.

காலை எட்டு முப்பது மணி, பகல் 1.30 மணி, இரவு ஒன்பது முப்பது மணி நேரத்தில் ரயில்கள் இந்த வழியே சென்று வருவதால் ரயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மேலும் அதிகமாகி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதனால் முள்ளுவாடி கேட் பகுதியை ஒரு வழி பாதையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தினார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலம் வழியே வாகனங்கள் சென்று அண்ணா பூங்கா, சுந்தர் லாட்ஜ், வழியே வாகனங்கள் செல்லவும், சுந்தரி லாட்ஜ் பகுதியிலிருந்து முள்ளுவாடி கேட் வழியே வாகனங்கள் டவுனுக்கு வரவும் வழிவகை செய்ய வேண்டும்.முள்ளுவாடி ரயில் பாதை ஒரு வழி பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாமல் ஆகிவிடும். தற்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதை கருத்தில் கொண்டு ஈ டிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து சில நாட்களில் சேலம் மாநகர காவல்துறை முள்ளுவாடி கேட் பாதையை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.