நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

author img

By

Published : Sep 5, 2022, 9:40 PM IST

Etv Bharat மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய கணவர் கைது

ஆற்காடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடூரமாக கொன்று வீட்டின் உள்ளே கிணற்றில் மூட்டையில் கட்டி வீசிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு பெரிய தெருவைச் சேர்ந்த தம்பதி ராமு, சரிதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் பெருமுகை பகுதியில் உள்ள தனியார் ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை இன்மை காரணமாக இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும் மேலும் ராமு சரிதாவின் நடத்தையின் மீது சந்தேகம் பட்டு பல்வேறு நேரங்களில் சண்டையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒன்றாம் தேதி ராமு ரத்தினகிரி காவல் நிலையத்தில் சென்று தனது மனைவி சரிதாவை காணவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் புகார் தெரிவித்த நிலையில் ராமு கேஜிஎப் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ராமு குடியிருந்த வீட்டின் உள்ளிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ரத்தினகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ரத்தினகிரி காவல் துறையினர் ராமுவின் வீட்டிற்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்த போது சரிதா துணிகளால் சுத்தப்பட்டு கயிறுகளால் கட்டியபடி கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சரிதாவின் உடலை மீட்ட காவல் துறையினர், வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் இது சம்பந்தமாக கே ஜி எஃப் பகுதியில் இருந்த ராமுவை தற்போது ரத்தினகிரி காவல்துறையினர் போனில் மூலம் வரவழைத்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக கொலை செய்து துணியால் மூட்டையாக கட்டி கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் ரத்தினகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மீது கொலைவெறி தாக்குதல் - ஆந்திர இளைஞர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.