ETV Bharat / state

நெல் கொள்முதல் செய்ய கையூட்டு வாங்கும் அரசு அலுவலர்கள்!

author img

By

Published : Apr 29, 2021, 6:50 AM IST

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள்
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள்

ராணிப்பேட்டை: நெல் கொள்முதல் செய்ய அரசு அலுவலர்கள் கையூட்டு கேட்பதால் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கடந்த 45 நாள்களாகத் தேங்கியிருப்பதாக உழவர்கள் புகார் கூறுகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 80 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்பட்டு, உழவர்களுக்கு பணம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் தச்சம்பட்டறை கிராமத்தில், கடந்தாண்டு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிலையத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த உழவர் வெங்கடாசலம் என்பவர் முறையான அனுமதி பெற்று நடத்திவரும் நிலையில், அறுவடையான நெல்லை கொள்முதல் செய்யக் கோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நாகராஜன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோரை வெங்காடாசலம் அணுகியுள்ளார்.

அப்போது அறுவடையான நெல்லுக்கு கொள்முதல் உரிமம் வழங்க ரூபாய் இரண்டு லட்சம் வழங்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பணம் தராததால் நெல்லை கொள்முதல் செய்ய அவருக்கு காலதாமதமாக அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் உழவர் வெங்கடாசலம் அப்பகுதி உழவர்களிடமிருந்து சுமார் 13 ஆயிரம் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்துள்ளார். இதனால், கொள்முதலுக்காக உள்ள சுமார் 13 ஆயிரம் நெல் மூட்டைகள் ரசீது போடப்படாமல் தேங்கியுள்ளன. கடும் இழப்பைச் சந்திக்கும் சூழலுக்கு உழவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் மண்டல மேலாளர் நாகராஜன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மோகன் ஆகியோர் முகவர்களை வைத்து வெளி மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகளைக் கொண்டுவந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து முறைகேடான வகையில் பணம் ஈட்டிவருவதாகவும் புகார் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம், வருமானவரித் துறையினர், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உழவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை'- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.