ETV Bharat / state

பாம்பன் பாலத்தில் ஆபத்தான முறையில் செல்பி

author img

By

Published : Sep 2, 2021, 3:30 PM IST

pamban bridge  tourist taking risky selfie at pamban bridge  selfie  risky selfie  ramanathapuram news  ramanathapuram latest news  பாம்பன் பாலத்தில் ஆபத்தான முறையில் செல்ஃபி  ஆபத்தான முறையில் செல்ஃபி  செல்ஃபி  பாம்பன் பாலம்
பாம்பன் பாலம்

பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு வருகைதர தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு வருகை புரியும் மக்கள், தங்களது வாகனங்களை நிறுத்திக்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துவருகின்றனர்.

ஆபத்தான முறையில் செல்பி...

இந்நிலையில், ஆகஸ்ட் 30ஆம் தேதி, ஒருவர் செல்பி மோகத்தால் வாகனத்தின் மேல் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் பார்ப்போரை பதரச் செய்தது.

உயிரை பணயம் வைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு காவல் துறையினர் அனுமதிக்கக்கூடாது எனப் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக பாலத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.