ETV Bharat / state

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான இடங்களில் ராமநாதபுரம் ஆட்சியர் ஆய்வு

author img

By

Published : Dec 23, 2020, 1:53 AM IST

Ramanathapuram Collector inspects
Ramanathapuram Collector inspects

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே புதிதாக தொடங்க உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கான இடங்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் ஊராட்சிக்கு உட்பட்ட குதிரை மொழி கடற்கரைப் பகுதியில், 60மிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, குதிரை மொழியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று (டிசம்பர் 22) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, நியாய விலை கடைக்கு சென்ற ஆட்சியர், பொருள்கள் விநியோகம் முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.