ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி; விளைவுகள் ஆளுநருக்கு நன்றாக தெரியும் - அமைச்சர் ரகுபதி!

author img

By

Published : Nov 28, 2022, 3:50 PM IST

ஆன்லைன் ரம்மி தொடர்பாக அசம்பாவிதம் நடந்தால்? - அமைச்சர் ரகுபதி பதில்
ஆன்லைன் ரம்மி தொடர்பாக அசம்பாவிதம் நடந்தால்? - அமைச்சர் ரகுபதி பதில்

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதை மக்களிடமே விட்டு விடுகிறோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட தடை செய்தல், ஒழுங்குமுறைபடுத்துதல், சட்டத்தின் அவசரகால சட்டத்தின் காலம் நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது.

நேற்று மாலைக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்துவதற்குதான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது. ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத் தெளிவாக தமிழ்நாடு அரசு விளக்கியுள்ளது.

99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் இவைகள் ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையைதான் தமிழ்நாடு அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதப்படுத்துகிறார் என்பது அவருக்குதான் தெரியும் என்று கூறினார்.

அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, "சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில்தான் இனி தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த முடியும். அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். ஆளுநர் கையெழுத்து போட்டுவிட்டால் இது உயிர் வந்து விடும். தற்போது உள்ள சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

தற்போது வரை ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கும். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்தால், அதற்கு யார் பொறுப்பு என்பதை பொதுமக்களிடமே விட்டு விடுகிறோம். ஆளுநர் மீது வழக்கு போட முடியாது. ஆளுநர் இந்த சட்டத்தில் கையொப்பம் இடவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. ஆளுநர் கேட்கும் கேள்விகளுக்குதான் நாங்கள் பதில் கூற முடியும். தெளிவான பதில்களை நாங்கள் ஏற்கனவே ஆளுநருக்கு கூறியுள்ளோம்" என கூறினார்.

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ...ஆளுநருக்கு தமிழக அரசு விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.