ETV Bharat / state

அதே 'பிரச்னை' அதே 'நபர்' அதே 'அலுவலகம்' - இரண்டாவது முறை தீக்குளிக்க முயற்சி

author img

By

Published : Jan 27, 2020, 10:54 PM IST

Updated : Jan 28, 2020, 10:10 AM IST

SUICIDE
SUICIDE

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் இளைஞன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகன் அருள்செல்வன் (27) ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அருள்செல்வன் பைக்கில் செல்லும்போது, அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மங்களமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கானது பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

நீதிமன்றம் தனுடைய வழக்கை சீக்கிரம் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இரண்டாவது முறையாக தீக்குளிக்க முயன்ற நபர்

இந்நிலையில், பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியில் திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கும்போது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்துநிறுத்திக் காப்பாற்றினர். தற்போது அருள்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம்

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விபத்தில் காயமுற்ற வாலிபர் நஷ்ட ஈடு வழங்கவும் தீர்ப்பு வழங்குவதற்கு தாமதப்படுத்துவது கண்டித்து விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி


Body:பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் அருள்செல்வன் வயது 27 ஆட்டோ டிரைவராக உள்ளார் இதனிடையே கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது இவ்விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த வழக்கு தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது மேலும் வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்க தாமதப்படுத்துவது ஆளும் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் இன்னிலையில் பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியில் இன்று மீண்டும் மன்னனை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றபோது அருள்செல்வன் மன்னனை விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை உண்டாக்கியது


Conclusion:மேலும் மாவட்ட ஆட்சியர் மனு வாங்கும் இடத்திலேயே மன்னனை ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது அங்கிருந்த காவலர்கள் மீட்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Last Updated :Jan 28, 2020, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.