ETV Bharat / state

பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் காயம்

author img

By

Published : Jan 27, 2020, 6:58 PM IST

விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

accident
accident

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூரிலிருந்து நாயனூர் செல்லும் சாலையில், தனியார் பள்ளி வாகனம் 22 குழந்தைகளுடன சென்றுகொண்டிருந்தது. அப்போது, திருக்கோவிலூரிலிருந்து செஞ்சி நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளிப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

பள்ளிப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

இந்த விபத்தில் தனியார் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநர், பயணிகள், பள்ளிக் குழந்தைகள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அரகண்டநல்லூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்த பெண் உள்பட 6 பேர் கைது

Intro:tn_vpm_01_thirukovilur_school_bus_accident_vis_tn10026Body:tn_vpm_01_thirukovilur_school_bus_accident_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே பள்ளி பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுனர் உட்பட 10 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் !!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பகுதி தேவனூர். இந்த பகுதியில் இருந்து நாயனூர் செல்லும் சாலையில் இன்று காலை அரகண்டநல்லூரில் உள்ள பாலாமந்திர் எனும் தனியார் பள்ளி வாகனம் பள்ளி குழந்தைகள் 22 பேருடன் அரகண்டநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே போல திருக்கோவிலூரில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், தேவனூர் நாயனூர் சாலை அருகே வந்து கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் ராஜிவ் காந்தி (32) என்பவருக்கு வலதுகாலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பள்ளி வாகனத்தில் பயணம் செய்த மெல்வின் ராஜ்(4), நிகித்தா(4), யாஸ்மின்(4) ஆகியோரும், அதே போல தனியார் பேருந்தில் பயணம் செய்த தங்கவேல் (50), மணிகண்டன் (36), பத்மா(40), தமிழரசி (36), சுந்தரமூர்த்தி (53) ஆகியோர் சிறிய காயங்களுடன் திருக்கோவிலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரகண்டநல்லூர் போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.