ETV Bharat / state

"கருணாநிதி படிப்பகம் அல்ல; குடிப்பகம் என்பதே சரி" - பெரம்பலூரில் சீறிய சீமான்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 10:25 PM IST

கருணாநிதி படிப்பகம் அல்ல, குடிப்பகம் என்பதே சரி - சீமான் பேச்சு
கருணாநிதி படிப்பகம் அல்ல, குடிப்பகம் என்பதே சரி - சீமான் பேச்சு

Seeman: அவதூறான அரசியலை ஆரம்பித்து அரிச்சுவடியை தொடங்கிய கட்சி திமுக என்றும், கருணாநிதி படிப்பகம் என்பதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்பதே சரி என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

கருணாநிதி படிப்பகம் அல்ல, குடிப்பகம் என்பதே சரி - சீமான் பேச்சு

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதி தனியார் திருமண மஹாலில், நாம் தமிழர் கட்சி பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த கேள்விக்கு, "காவிரி நீரை பங்கிட்டு தராத உனக்கு, காவிரி நீர் தராத, போராடாத காங்கிரஸ் கட்சிக்கு எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் நினைப்பார்கள். ஆகவே காங்கிரஸ் உடனான கூட்டணியில் இருந்து திமுகவால் விலகிட முடியுமா? குறைந்த பட்ச தன்மானம் திமுகவிற்கு உண்டா” என்று கேள்வி எழுப்பினர்.

நீட், கச்சதீவு, காவிரி நதி நீர் என ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்றால் தான் பெற முடியும் என்றால்
சட்ட மன்றம், பாராளுமன்றம் எதற்கு. இந்த நாட்டை நிர்வகிப்பது மாண்புமிகு நீதியரசர்களா? மாண்புமிகு அமைச்சர்களா? முதலமைச்சரா? பிரதமரா? சட்டமன்றம் எதற்கு மேஜை தட்டுவதற்கா? பல்லாங்குழி, கிச்சு கிச்சு விளையாட்டு விளையாடுவதற்கா?

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருவதற்காகத் தானே சட்டமன்றமும், பாராளுமன்றமும். அதைவிடுத்து, எல்லாவற்றிற்கும் நீதிமன்றம் சென்று தான் தீர்வு காண வேண்டும் என்றால் சட்டமன்றமும், பாராளுமன்றமும் எதற்கு. கலைத்து விடலாமே. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவாகத் தான் நீதிமன்றம் செயல்பட முடியும்” எனத் தெரிவித்தார்.

பின்னர் H. ராஜா மீது திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தது குறித்த கேள்விக்கு, “அவதூறு வழக்கு போட வேண்டும் என்றால் மொத்த திமுகவிற்கும் போட வேண்டும். அவதூறான அரசியல் ஆரம்பித்து வைத்து அரிச்சுவடியை தொடங்கியை கட்சி, ஆட்சி திமுக” எனக் கூறினார். தொடர்ந்து, மகளிர் உரிமைத் திட்டம் குறித்த கேள்விக்கு
“மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெறுக்கிறேன்.

மக்களின் வரிப்பணத்தில் கொடுக்க கூடிய திட்டத்திற்கு கருணாநிதி பெயர் எதற்கு. உங்க அப்பா பெயர் வைக்கக் கூடிய ஒரே இடம், கருணாநிதி படிப்பகம் எதற்கு பதிலாக கருணாநிதி குடிப்பகம் என்று பெயர் வைக்கலாம்” என தெரிவித்தார். மேலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் கூறினார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "நன்றி மீண்டும் வராதீர்கள்" பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.