ETV Bharat / state

"நன்றி மீண்டும் வராதீர்கள்" பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 5:41 PM IST

Updated : Sep 25, 2023, 5:56 PM IST

Etv Bharat
Etv Bharat

AIADMK BJP alliance break: தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) உடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை: அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து மோதல் நிலவி வந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை குறித்து விமர்சித்த கருத்து அதிமுக தொண்டர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக, அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அண்ணாதுரை குறித்தும் விமர்சித்ததால் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையைக் கடுமையாக விமர்சித்தனர், மேலும் கூட்டணி கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக அறிவித்தார்.

  • K P Munusamy, AIADMK Deputy Coordinator says, "AIADMK unanimously passed a resolution in the meeting. AIADMK is breaking all ties with BJP and NDA from today. The state leadership of the BJP has been continuously making unnecessary remarks about our former leaders, our general… pic.twitter.com/Ho9AZ50VY4

    — ANI (@ANI) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இன்று அதிமுக தலைமையிடத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் உட்பட தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள் பாஜகவுடன் அதிமுக கூட்டணியைத் தொடர வேண்டாம் எனக் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூட்டத்திற்குப் பின்னர் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார். மேலும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அதிமுக தலைமையில் தேர்தலில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவடைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்த உடன், அதிமுக தலைமை கழகம் முன்பு கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

  • மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து…

    — AIADMK (@AIADMKOfficial) September 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே அதிமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கமான எக்ஸ்(X) தளத்தில்," எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடி தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து அஇஅதிமுக இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது. நன்றி மீண்டும் வராதீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: Puducherry BJP: புதுச்சேரி மாநில தலைவர் மாற்றம்; பாஜக தலைமை அதிரடி அறிவிப்பு!

Last Updated :Sep 25, 2023, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.