ETV Bharat / state

மாவட்டத்தில் 5 எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: எஸ்.பி. நிஷா பார்த்திபன் தகவல்

author img

By

Published : Mar 25, 2020, 7:16 PM IST

Perambalu SP Press Meet
Perambalur Superintendent of Police press meet

பெரம்பலூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மாவட்டத்தில் 5 எல்லைகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் கூறினார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

”கரோனா வைரஸ் எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடாத அளவிற்கு ஒலிபெருக்கி மூலம் காவல் துறையினர் அறிவித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் 5 எல்லைகள் மூடப்பட்டு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வராத அளவிற்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ இயங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது, மீறி இயக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால் சந்து கடைகளில் மது விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 5 நபர்களுக்கு மேல் கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக 144 தடை உத்தரவிற்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: 'கரோனா தொற்றை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை' - எஸ்.பி. வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.