ETV Bharat / state

பெரம்பலூருக்கு புதிய எஸ்.பி; நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றார்!

author img

By

Published : Aug 20, 2019, 7:20 AM IST

நிஷா பார்த்திபன் எஸ்.பி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புதிய காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் “பெரம்பலூர் மாவட்டத்தின் மையத்திலேயே, மிக நீண்ட தூரத்திற்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளுக்குப் போக்குவரத்து விதிமீறல்கள் தான் காரணம்.

முதல் கட்டமாக, மாவட்ட காவல் துறை சார்பாகத் தலைக்கவசம் அவசியம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு அதிவேகமாக, அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் சாலை போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

பெரம்பலூருக்கு புதிய எஸ்.பி; நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றார்

முக்கிய இடங்களில் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தும் பணியும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கண்காணிப்பு படக்கருவிகள் மூலம் கொண்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காகக் காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Intro:பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார்


Body:பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆக இருந்தது சமைத்தல் திருப்பூரில் எஸ்பியாக பணிமாறுதல் பெற்றதையடுத்து புதிய எஸ்பியாக நிஷா பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த பெரம்பலூர் மாவட்டத்தில் மையத்திலேயே மிக நீண்ட தூரத்திற்கு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது இதில் சாலை போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவதற்கு முதல் கட்டமாக மாவட்ட காவல் துறை சார்பாக கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் குடித்து விட்டு அதிவேகமாக அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மேலும் சாலை போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடுவோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் தெரிவித்தார்


Conclusion:மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.